Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுமோசமான கிராபிக்ஸ், டைரக்‌ஷன்: ‘ஆதிபுருஷ்’ படத்தை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்..!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (08:32 IST)
பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் இந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் இந்த படத்தை பார்த்த நெட்டிசங்கல் படுமோசமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 
 
ஓம் ராவத்  இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்பட பல மொழிகளில் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படுமோசமான விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர். 
 
மிக மோசமான இயக்கம் என்றும் கிராபிக்ஸ் காட்சிகள் நகைச்சுவையாக இருக்கிறது என்றும் பதிவு செய்து வருகின்றனர். பிரபாஸின் நடிப்பு ஓகே என்றாலும் எந்த ஒரு காட்சிகள் எதுவுமே கவரும் வகையில் இல்லை என்றும் மிக மோசமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். 
 
சண்டை காட்சிகளும், பேக்ரவுண்ட் இசையும் நன்றாக இருந்தாலும் ராவணன் கேரக்டர் காமெடியாக இருக்கிறது என்றும் படத்தின் நீளமும் அதிகம் என்றும் ஒரு கார்ட்டூன் படம் பார்த்த உணர்வு கூட இந்த படத்தை பார்க்கும்போது இல்லை என்றும் பதிவு செய்து வருகின்றனர். 
 
இருப்பினும் இந்த படத்தின் பொதுமக்கள் விமர்சனம் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments