ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தை இயக்குகிறாரா பிரதீப் ரங்கநாதன்?

vinoth
வியாழன், 18 செப்டம்பர் 2025 (08:22 IST)
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக மிகப்பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். இருவரும் தங்கள் கெரியர் தொடக்கத்தில் ஒன்றாக இணைந்து இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படிதான் என பல படங்களில் நடித்திருந்தாலும் பின்னர் பிரிந்து தனித்தனி வழியில் பயணிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் 45 ஆண்டுகளாக இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

ஆனால் அவர்கள் இணைந்து ஒரு படம் நடிக்கவேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் தீராத ஆசையாக இருந்தது. இந்நிலையில்  ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நீண்ட காலம் கழித்து படம் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘கமலுடன் இணைந்து நடிக்க ஆசை உள்ளது. ஆனால் நல்ல கதையும் இயக்குனரும் அமையவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தைக் கமல்ஹாசனின் ராஜகமல் பிலிம்ஸ் நிறுவனமும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது. அந்த படத்தை இயக்குவதற்கான இயக்குனர் பட்டியலில் பிரதீப் ரங்கநாதன் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப்படம் ‘Unkill 123’… மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்!

வெளிநாட்டு வியாபாரத்தில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படைத்துள்ள சாதனை!

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

அடுத்த கட்டுரையில்
Show comments