Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவில் ஒருமாதமாக வசூல் மழை பொழியும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ திரைப்படம்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (09:00 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த  2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து இரண்டாம் பாகமான புஷ்பா தி ரைஸ் படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயலும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லுவதாக இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்படுகிறது. இதற்காக ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் புஷ்பா திரைப்படம் ரஷ்யன் மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த மாதம் 700க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து அங்கு வெற்றிகரமாக ஓடிவரும் இந்த திரைப்படம் 1 கோடி ரூபிள்கள் வசூல் செய்து தொடர்ந்து ஓடி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments