Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்சூர் அலிகான் போல ஐஸ்வர்யா ராயைப் பற்றி பேசிய ராதாரவி… சின்மயி வெளியிட்ட வீடியோ!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (11:17 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் அந்த கால படங்களில் நடிகைகளை ரேப் செய்யும் காட்சிகள் வந்ததாகவும், அதேபோல இதிலும் எதாவது காட்சிகள் இருக்கும் என நினைத்ததாகவும் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய சினிமாவை சேர்ந்த பலர் கண்டனங்கள் தெரிவித்தும் மன்சூர் அலிகான் தன் பேச்சுக்கு மன்னிபுக் கேட்கப் போவதில்லை என விடாப்பிடியாகக் கூறி வருகிறார்.

இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகானை கடுமையாக விமர்சித்து வரும் பாடகி சின்மயி இப்போது தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் ராதாரவி இதுபோல ஐஸ்வர்யா ராய் பற்றி ஆபாசமாக பேசும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ராதாரவி பேசியுள்ள அந்த வீடியோவில் “எனக்கு மட்டும் இந்தி தெரிந்திருந்தால் நான் இந்தி சினிமாவுக்கு சென்று ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன் இல்ல.. எனக்கு என்ன கடவுள் வேஷமா கொடுக்க போறானுங்க” எனப் பேசியுள்ளார். இதையடுத்து பலரும் ராதாரவியின் அந்த பேச்சுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

நிலையான வசூலைத் தக்கவைத்த ‘டூரிஸ்ட் பேமிலி’… ஆறு நாட்களில் இத்தனைக் கோடியா?

லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்து விருது விழாக்களுக்கான படம்… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments