இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முக்கியமான வணிக் வெற்றி படங்களை எடுத்த இயக்குனர் லிங்குசாமி கடைசியாக இயக்கிய அஞ்சான் மற்றும் சண்டக்கோழி 2 ஆகியப் படங்களின் தோல்வியால் துவண்டு போயிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவர் தயாரித்த உத்தமவில்லன் உள்ளிட்ட படங்கள் நஷ்டமடைந்ததால் பொருளாதார ரீதியாகவும் சிக்கலில் உள்ளார்.
இதனையடுத்து இப்போது இவர் புதியப் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க இயக்குனர், நடிகர் ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. லாரன்ஸ் நடித்து சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 படம் பெருவெற்றி பெற்றதை அடுத்து காஞ்சனா 4 படமும் உருவாக இருக்கிறது.
ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்தப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.