ரஜினியுடன் மோதும் எஸ் ஜே சூர்யா… கோவாவில் முழுவீச்சில் ஜெயிலர் 2 ஷூட்டிங்!

vinoth
திங்கள், 3 நவம்பர் 2025 (09:45 IST)
தன்னுடைய 74 ஆவது வயதிலும் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இணையாக பிஸியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

அதன் காரணமாக தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ரஜினிகாந்தின் நண்பருமான பாலகிருஷ்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது கோவாவில் முகாமிட்டுள்ள ‘ஜெயிலர் 2’ படக்குழு ரஜினிகாந்த் மற்றும் எஸ் ஜே சூர்யா சேர்ந்து நடிக்கும் காட்சிகளைப் படமாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments