Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்கள் சந்திப்பை கேன்சல் செய்த ரஜினி?.. இதுதான் காரணமா?

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (09:09 IST)
ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படங்களுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை, இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தபடத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் பற்றி சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிப்பதாகவும், அவர் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் என்கவுண்ட்டர்களுக்கு எதிராக போராடும் வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் நீண்டகாலமாக ரசிகர்களை சந்திக்க இருந்த ரஜினிகாந்த், சென்னையில் ரசிகர்களை சந்திக்க இருந்தாராம். இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயனும் கலந்துகொள்ள இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் திடீரென ரஜினி, இப்போது சந்திப்பை ரத்து செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. இது ரஜினி ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் பதற்றம் எதிரொலி: ’தக்லைஃப்’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கமல்..!

ஐசரி கணேஷ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடகி கென்னிஷாவுடன் கலந்துகொண்ட ரவி மோகன்!

அட்லி &அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கிறாரா சமந்தா?... அவரே அளித்த பதில்!

பிரபல ஓடிடியில் ரிலீஸான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் ஜோடியாகும் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments