Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசி விஸ்வநாதர் கோவிலுக்கு "பேட்ட கெட்டப்பில்" சென்ற ரஜினி!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (12:38 IST)
முறுக்கு மீசையுடன் கோவிலுக்கு வந்த நடிகர் ரஜினியை அங்கிருந்த பலரும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். 
‘காலா’ படத்திற்குப் பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன், நடிகர்கள் விஜய் சேதுபதி,சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் வருகின்றனர் பலர் பிரபலங்கள் நடித்து வருகின்றனர். 
 
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது ‘பேட்ட’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு லக்னோ மற்றும் வாரணாசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பேட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது. 
 
இந்நிலையில் பேட்ட படப்பிடிப்பிற்கு இடையே நடிகர் ரஜினிகாந்த்  உலகப்புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகைபுரிந்த அவர், பேட்ட பட முறுக்கு மீசையுடன் தோற்றமளித்துள்ளார். 
 
அதை பார்த்த அங்கிருந்த மக்கள்  சுற்றுலா பயணிகள் அவருடன் புகைப்படம் எடுக்க  முண்டியடிதுள்ளனர். இதனால் அங்கு சற்றுநேரம்  பரபரப்பு நிலவியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியை இயக்குகிறாரா ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யோடு மோதுகிறதா ‘சூர்யா 44’?

பருத்திவீரனுக்குப் பிறகு இந்த படம்தான்… கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

அவர்கள் சினிமாவுக்கு வர நினைத்து தோற்றவர்கள்.. விமர்சகர்களுக்கு என்ன தெரியும்?.... பார்த்திபன் கேள்வி!

மீண்டும் சாகசம் செய்ய வருகிறார் ஜாக்கி சான்.. ஏஐ மூலம் இளவயது கேரக்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments