Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்...வைரலாகும் புகைப்படங்கள்

Rajinikanth Celebrates Deepava
Webdunia
சனி, 14 நவம்பர் 2020 (16:18 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். அவருக்கு உலகெங்கும் பல  கோடி ரசிகர்கள் உள்ளனர்.

அவர் தற்போது, அண்ணாத்த என்ற படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். அவருடன் கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட நடிகைகளும் பிரபல நடிகைகளும் நடித்து வந்த நிலையில் கொரோனா கால ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இன்று தீபாவளி என்பதால்  ரஜினியின் ரசிகர்கள்காலையில், அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன் நின்று அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

அப்போது அவரும் கை அசைத்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், மனைவி லதா ரஜினிகாந்த், மற்றும் மருமகன்  பேரக்குழந்தை ஆகியோருடன் இணைந்து தீபாவளியை பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்.

இதுகுறித்த புகைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பீஸ்ட்’ நடிகர் சென்ற கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தை பலி.. அதிர்ச்சி தகவல்..!

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments