Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு மற்றும் இந்தியில் கூலி படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

vinoth
செவ்வாய், 18 மார்ச் 2025 (16:20 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  கடந்த சில வாரங்களாக படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் அதே தேதியில் ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோர் நடிக்கும் ‘வார் 2’ படமும் ரிலீஸாகவுள்ளது. அதனால் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழி பேசும் மாநிலங்களில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments