Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் இருந்து இறங்கி ரசிகர்களுடன் பேசிய ரஜினி..வைரல் போட்டோ

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (16:34 IST)
நெல்சன்  இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். இப்படம் வசூல் சாதனை படைத்துள்ள நிலையில், இப்படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.
 
இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இன்று முதல் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்குக்காக படக்குழுவினர் ரஜினியோடு திருவனந்தபுரத்துக்கு சமீபத்தில் சென்ற    நிலையில் அங்கு  பூஜையுடன் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.
 
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் தலைவர் 170 பட ஷூட்டிங்  நடைபெற்று வருகிறது.  நேற்று, நடிகர் ரஜினிகாந்த் காரில் சென்று கொண்டிருக்கும்போது  அவரைக் காண அவரது காரை ரசிகர்கள் பின் தொடர்ந்தனர். இதுகுறித்த  வீடியோ வைரலானது.

இந்த  நிலையில், இன்று ஷூட்டிங்கிற்கு காரில் சென்று கொண்டிருந்த ரஜினிகாந்த், திடீரென்று காரில் இருந்து கீழிறங்கி, அங்கிருந்த ரசிகர்களிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.


எனவே மற்ற நடிகர்கள் கைகாட்டிவிட்டு, சென்றுவிடுவார்கள் ஆனால், ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு மதிப்பளித்து, அவர்களுடன் பேசிவிட்டு செல்லுவதாக ரசிகர்கள் ரஜினியை பாராட்டி வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ரஜினிக்குக் கதை சொல்ல அந்த இயக்குனரை அனுப்பினேன்’… ஆனால்?- கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த தகவல்!

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments