Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இத சாப்பிடலாமா… வேணாமா… “ பியர் கிரில்ஸுடன் ரண்வீர் சாகசப் பயணம்… புதிய ப்ரோமோ!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (10:18 IST)
ரண்வீர் சிங் கலந்துகொண்ட சாகசப் பயண நிகழ்ச்சி இன்று முதல் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

உலக புகழ்பெற்ற பியர் க்ரில்ஸின் காட்டு பயண சாகசமான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் ஹாலிவுட் ஸ்டார்கள் வரை பலர் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்து கொண்ட இந்திய பிரபலம் பிரதமர் நரேந்திர மோடிதான். அதற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.  இந்த இரு எபிசோட்களும் இந்தியாவில் பெரிய அளவில் கவனம் பெற்றன.

இந்நிலையில் இப்போது இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சி இன்று முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றில் பியர் கிரில்ஸ் வண்டு ஒன்றைக் கொடுத்து அதை ரண்வீரை சாப்பிட சொல்கிறார்கள். அதை சாப்பிடுவதா வேண்டாமா என ரசிகர்களிடமே கேட்கிறார் ரண்வீர். இந்த புதிய ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எதிர்கொள்வோம்.. எதிரி கொல்வோம்.. சூர்யாவின் ‘கங்குவா’ டிரைலர்..!

டெல்லி கணேஷ் மறைவு: முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை, விஜய் இரங்கல்..!

டீசர்லாம் மாஸ்தான்.. ஆனா கதை? தப்பிப்பாரா சங்கர்? - கேம் சேஞ்சர் டீசர் ரியாக்‌ஷன்!

முடிஞ்சா உன் ஆளை காப்பாத்திக்கோ..! சல்மான்கானுக்கு சவால் விட்ட பிஷ்னோய் கும்பல்!

சிவகார்த்திகேயனுக்கு புதிய வசூல் உச்சத்தை கொடுத்த ‘அமரன்’ - 10 நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments