Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் பலாத்காரம் குறித்து ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிரபல நடிகை

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (06:46 IST)
பாலியல் பலாத்காரத்தால் ஒரு பெண்ணுக்கு நேரும் கொடுமைகள் என்ன? அதனால் அந்த பெண்ணின் வாழ்க்கை மட்டுமின்றி அந்த பெண்ணின் குடும்பமே சுக்குநூறாவது போன்றவற்றை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதை தெரிய வைக்கும் முயற்சியே 'மடர்' (Maatr) என்ற படத்தின் முயற்சி என்று பிரபல நடிகை ரவீனா தண்டன் கூறியுள்ளார்.



 


ஆனால் இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்துவிட்டது சென்சார் போர்டு. இதனால் ரவீணா கொதித்து போய் உள்ளார்.

கமல்ஹாசனுடன் 'ஆளவந்தான்' படத்தில் நடித்த ரவீணா, இந்த படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளதாகவும், பாலியல் வன்முறை குறித்து கூறுவதாக சொல்லப்படும் இந்த படம் ரசிகர்களின் மனநிலையை நிச்சயம் பாதிக்கும் என்று கூறி படத்தை ஒதுக்கிவிட்டது சென்சார் போர்டு.

இதுகுறித்து ரவீணா கூறியபோது, 'தற்போது சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சிலவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும். படத்தில் எந்த விதமான பொய்களும் இல்லை. உண்மையை காட்டினால் தான் ரசிகர்கள் கொடுமை நிலை புரியும். அந்த நிலை தெரிந்தால்தான் ரசிகர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள்' என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்