Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசரி கணேஷ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடகி கென்னிஷாவுடன் கலந்துகொண்ட ரவி மோகன்!

vinoth
வெள்ளி, 9 மே 2025 (10:14 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர்  ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதாக ரவி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆர்த்தி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இவர்கள் விவாகரத்து சம்மந்தமான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவர்கள் பிரிவுக்குக் காரணமாக பிரபல பாடகி கென்னிஷா பிரான்சிஸ் பெயர் சொல்லப்பட்டது.  கென்னிஷா மற்றும் ரவி மோகன் ஆகிய இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதை இருவருமே மறுத்தனர்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயம் ரவி மற்றும் கென்னிஷா ஆகிய இருவரும் ஒரே நிறத்தில் ஆடையணிந்து ஒன்றாக வந்து கலந்துகொண்டது, அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது. இதன் மூலம் அவர்களின் காதல் கிசுகிசு மீண்டும் உயிர்க்கொள்ள ஆரம்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

பாக்கி இல்லாமல் பாக்கிஸ்தான் சீர்குலைக்கப் படலாம்: இயக்குனர் பார்த்திபன்

போர் பதற்றம் எதிரொலி: ’தக்லைஃப்’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கமல்..!

ஐசரி கணேஷ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடகி கென்னிஷாவுடன் கலந்துகொண்ட ரவி மோகன்!

அடுத்த கட்டுரையில்