Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவின் படத்தில் எஸ் ஜே சூர்யாவா? யாருப்பா கிளப்பிவிட்டது?

vinoth
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (07:19 IST)
சின்னத்திரையில் இருந்து வந்து இன்று கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக நான்கே படங்களில் உயர்ந்துள்ளார் நெல்சன். அவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் ஜெயிலர் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது நெல்சன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை நெல்சனின் இணை இயக்குனர் சிவபாலன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் கவின் மற்றும் பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் அனிருத் இசையமைக்கிறாராம். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தது. ஆனால் எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் நடிக்கவில்லை என்று உறுதிபடுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments