Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வில்லனான எஸ் ஜே சூர்யா… இந்த முறை எந்த ஹீரோவுக்கு தெரியுமா?

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (10:59 IST)
இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் வில்லனாக நடிக்க வுள்ளாராம்.

சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார், அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு டான் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மார்ச் மாதம் தொடங்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்து இப்போது இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதையொட்டி கோயம்புத்தூரைச் சேர்ந்த நடிகர் நடிகைகளுக்கான வயது, முகத்தோற்றம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அந்த மாதிரியானவர்கள் தங்கள் ஒரு நிமிடக் காட்சிகளை அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ளாராம். இவர் ஏற்கனவே விஜய்யின் மெர்சல் மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments