இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்த் உடன பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். தனது ரசிகர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இவர் ஏராளமான உதவிகள் செய்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர் சில ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சாதனை படைத்தார். இப்போது உடல்நலக் குறைவு காரணமாக சினிமா, அரசியல் என இரண்டில் இருந்தும் ஓய்வில் இருக்கிறார்.
திரைத்துறையில் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான எஸ் ஏ சந்திரசேகரன் விஜயகாந்த் இல்லத்துக்கு சென்று அவரை நேரில் சந்தித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களை பகிர்ந்து “என் உயிரை சந்தித்த போது” என ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “ விஜயகாந்தும் நானும் எவ்வளவோ படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். ஆனால் என்னை மட்டும் அவர் ராவுத்தர்கிட்ட பேச சொல்ல மாட்டார். நானும் ராவுத்தரிடம் இதுவரை பேசியதில்லை. இது என் கெத்து” எனக் கூறியுள்ளார்.
விஜயகாந்தும் இப்ராஹிம் ராவுத்தரும் நகமும் சதையுமாக இருந்தவர்கள். விஜயகாந்துக்கான கதைகளை தேர்வு செய்து அவரை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றதில் ராவுத்தருக்கு முக்கியப் பங்குண்டு.