Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக சைதன்யா & சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (07:21 IST)
தெலுங்கின் பிரபல நடிகரான நாக சைதன்யா கடந்த சில ஆண்டுகளாக வரிசையாக தோல்வி படங்களாக தந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தேங்க்யூ மற்றும் கஸ்டடி ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன.

இதையடுத்து அவர் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அந்த வகையில் இப்போது அவர் கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளதை படக்குழு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த படத்தை கார்த்திகேயா 2 என்ற ஹிட் படத்தை இயக்கிய சந்து மொண்டேட்டி இயக்குகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த படத்துக்கு “Thandel” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் மீனவ கிராம பின்னணியில் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments