Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ லூசா? லூசு மாதிரி நடிக்கிறியா? மீராவால் பொறுமை இழந்த சாக்சி

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (15:49 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீராமிதுன், குறிவைத்து ஒவ்வொருவரையும் திட்டம் போட்டு தாக்கி வருகிறார். தனது பக்கம் பலவீனமாக இருப்பது போல் தெரிந்தால் உடனே ஒரு கண்ணீர் நாடகத்தையும் நடத்தி விடுகிறார். ஆனால் மக்கள் ஏமாளியல்ல என்பதும், சக போட்டியாளர்கள் மட்டுமின்றி மக்களும் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்பதை அறியாத மீராமிதுன் வழக்கம்போல் தனது கபட நாடகத்தை நடத்தி வருகிறார்
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய புரமோவில் மீராமிதுன் கேப்டன் சாக்சியிடம் தனக்காக ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யும்படி கூறுகிறார். தன்னை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு இருப்பதாகவும், எனவே அவர்களிடம் தன்னுடைய நிலையை விளக்கும் வகையில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்தால், அதில் தான் மனம் விட்டு பேசுவதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மீராமிதுன் பேச்சை நம்பி சாக்சி அனைவரிடமும் பேசி ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்கிறார். ஆனால் அந்த மீட்டிங் அவருக்கு எதிராகவே திரும்புவதை பார்த்த மீரா, உடனே இந்த மீட்டிங்கை நான் ஏற்பாடு செய்யச் சொல்லவில்லை என்றும், நீயாகத்தான் ஏற்பாடு செய்தாய் என்றும் சாக்சியை குறை கூறுகிறார். 
 
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த சாக்சி 'நீ லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா? நீ என்ன செஞ்சிட்டு இருக்கேன்னே எனக்கு புரியவில்லை என்று கடும் கோபத்துடன் கூறுகிறார். இதனை அடுத்து வழக்கம்போல தனது கண்ணீர் நாடகத்தை மீராமிதுன்  தொடங்கினாலும், இந்த முறை அவருடைய கண்ணீரை  துடைக்க யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments