Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சல்மான்கானை பாம்பு கடித்தது: மருத்துவமனையில் அனுமதி!

சல்மான்கானை பாம்பு கடித்தது: மருத்துவமனையில் அனுமதி!
, ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (14:27 IST)
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்து விட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பிரபல நடிகர் சல்மான்கானுக்கு பிறந்தநாளை அடுத்து அவருக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் அவர் இன்னொரு பக்கம் தனது பிறந்தநாளையொட்டி பண்ணை வீட்டில் தங்கியிருந்தார்
 
பண்ணை வீட்டில் அவர் பிறந்த நாள் கொண்டாடி கொண்டிருந்தபோது திடீரென அவரை பாம்பு கடித்தது என கூறப்படுகிறது. இதனை அடுத்து அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
 
மருத்துவமனையில் சல்மான்கானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சல்மான்கான் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த வாரத்தில் வலிமை ட்ரெய்லர் ரிலீஸ்? – ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!