Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 சர்வதேச விருதுகளை வென்ற சமந்தா படம்

Webdunia
புதன், 31 மே 2023 (16:42 IST)
சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவான சாகுந்தலம் என்ற திரைப்படம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் படுதோல்வி அடைந்தது.

ரூபாய் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ.10 கோடி மட்டுமே உலகம் முழுவதும் வசூல் செய்தது.

இதையடுத்து,  படுதோல்வி அடைந்த சாகுந்தலம் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இன்று முதல் அமேசான் ஓடிடியில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூல் குவியாத நிலையிலும்,இப்படத்திற்கு விருதுகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், நியூயார்க் இண்டர்நேசனல் திரைப்பட விழாவில் பெஸ்ட் பேண்டசி பிலிம், பெஸ்ட் மியூசிக்கல் பிலிம், ஆகிய விருதுகள் வென்றது.

இதையடுத்து, தற்போது பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு, சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த பேண்டசி பிலிம்,பெஸ்ட் காஸ்ட்யூம் வடிவமைப்பு, சிறந்த இந்தியன் பிலிம் ஆகிய 4 விருதுகள் பெற்றுள்ளது சாகுந்தலம் படம்.

இதனால், சாகுந்தலம் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது….

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெளியானது விஜயின் கடைசி படத்தின் அப்டேட்.! தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் போஸ்டர்.!!

'தலைவெட்டியான் பாளையம்' எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

நடிகை சாந்தி பாலச்சந்திரன் திரைக்கதை எழுதுவதிலும் தடம் பதிக்கிறார்!

நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments