Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தும் சூப்பர் ஸ்டார்தான்… பல்டி அளித்த நடிகர் சரத்குமார்!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (09:55 IST)
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் அனைவரும் நடிகர் விஜய்யை புகழ்ந்து பேசினர். அப்போது பேசிய சரத்குமார் “சூர்யவம்சம் படத்தின் 175 ஆவது நாள் விழாவில் பேசும் போது விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நான் சொன்னேன். அப்போது அதைக் கேட்ட கலைஞரே வியந்தார். இப்போது விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். நான் அன்று சொன்னது இன்று பலித்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.

சரத்குமாரின் இந்த பேச்சு அஜித் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது ஒரு யுட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த சரத்குமார் “நான் ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை என்று சொல்லவில்லையே. விஜய் சூப்பர் ஸ்டார் ஆவார் என்றுதான் சொன்னேன். அஜித்தும் சூப்பர் ஸ்டார்தான். வாழ்க்கையில் சாதிக்கும் எந்த ஒரு நபரும் சூப்பர் ஸ்டார்தான்.” என சமாளித்து மழுப்பும் விதமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிறுக சேர்த்த பணத்தை கரையான் அரித்த சோகம்! - பணம் கொடுத்து உதவிய ராகவா லாரன்ஸ்!

மண்டாடி படத்தில் சூரி வில்லனா?... பிரபல தெலுங்கு நடிகர் சொன்ன பதில்!

லோகேஷ் கனகராஜின் ‘பென்ஸ்’ படத்தில் இணையும் மலையாள ஹீரோ!

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments