Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியின் 'சர்தார்': ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (13:17 IST)
கார்த்தியின் 'சர்தார்': ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் ரிலீஸ்!
கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்த 'சர்தார்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சரியான ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
கார்த்தி, ராஷிகண்ணா நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'சர்தார்' . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சச்சின் ரி ரிலீஸுக்கு வெற்றி விழா… 10 மடங்கு லாபம்- தயாரிப்பாளர் அறிவிப்பு!

விமல் படத்தை இயக்கிய இயக்குனர் திடீர் மறைவு.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!

அஜித்தின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் ‘வீரம்’… இன்று வெளியாகிறது டிரைலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments