Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்காரின் 'சிம்டங்காரன்' அதிருப்தியில் விஜய் ரசிகர்கள்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (18:44 IST)
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சர்கார்' படத்தின் சிங்கிள் பாடலான 'சிம்டங்காரன்' என்று தொடங்கும் பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகியது. இந்த பாடலை கேட்ட விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது.

மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' ரேஞ்சுக்கு எதிர்பார்த்த விஜய் ரசிகர்கள் பல வார்த்தைகள் புரியாமலும் சுமாரான டியூனிலும் வெளிவந்திருக்கும் இந்த பாடலால் அதிருப்தி அடைந்திருப்பதாக பதிவு செய்து வருகின்றனர்.

'சிம்டங்காரன்' என்றால்  'கவர்ந்து இழுப்பவன்,  பயமற்றவன், மற்றும் துடுக்கானவன்' என்று பாடலாசிரியர் தனது டுவிட்டரில் சில மணி நேரங்களுக்கு முன் விளக்கம் அளித்திருந்தபோதிலும் இந்த பாடல் அனைவரையும் கவரவில்லை என்பதே உண்மை.

அக்டோபர் 2ஆம் தேதி இந்த படத்தின் மற்ற பாடல்கள் வெளியாக உள்ளது. மற்ற பாடல்களாவது ரசிகர்களை திருப்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு.. ஜி வி பிரகாஷ் இசை.. ‘சூர்யா 46’ பூஜை க்ளிக்ஸ்!

எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் ஒரு அமைதி நிலவுகிறது… சர்ச்சைகளுக்கு சூசக பதில் அளித்த கெனிஷா!

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

கமல் & அன்பறிவ் கூட்டணி படத்தில் இருந்து வெளியேறிய லைகா.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments