Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’விமானத்தில் பயணம்...’’நடிகர் கமல்ஹாசனை விமர்சித்த சீமான்....

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (21:44 IST)
நடிகர் கமல்ஹாசன் ஹெலிகாப்டரிலும், விமானத்திலும் பயணம் செய்வதற்கு சீமான் விமர்சித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் தமிழக அரசியல்களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் முதன் முதலாக சட்டசபைத் தேர்தலில் களமிறங்குகிறார். அவர் கோவை தெற்குத் தொகுதியில் தமது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.

எனவே இன்று இத்தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் செய்தார்.

இந்நிலையில் கமல்ஹாசன் ஒவ்வொரு பகுதிக்கு விரைந்து செல்வதற்காக தனி விமானத்திலும், ஹெலிகாப்டரிலும் சென்று வருகிறார். சமீபத்தில் சென்னையில் இருந்து விமானம் மூலம் காஞ்சிபுரம் சென்ற அவர் மீண்டும் ஹெலிகாப்டரிலேயே சென்னை வந்தார்.

மேலும் இன்று சென்னையிலிருந்து கோவைக்குச் செல்ல விமானத்தை ஒப்பந்தம் செய்து அதில் புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து நாம் தமிழர் சீமான் விமர்சித்துள்ளார்.அதில், கமல்ஹாசன் பறந்துசெல்வதற்கு பிக்பாஸில் இருந்து பணம் வருகிறது. அப்படிச் செல்வது அவரது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேரில் ஆஜராக வேண்டும்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்..!

சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய நடிகையின் சகோதரி.. குவியும் பாராட்டுக்கள்..!

‘மார்க்கெட் இல்லாத ஹீரோவுக்கு நான் ஹிட் கொடுத்தேன்.. ஆனால் அவர்’ – சுந்தர் சி ஆதங்கம்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… டிரைலர் & பாடல் ரிலீஸ் அப்டேட்!

பிரியங்காவின் கணவர் வயது இவ்வளவுதானா? வயதானவர் என நினைத்து விட்டோமே..!

அடுத்த கட்டுரையில்
Show comments