Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓடிடியில் வெளியானது விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (14:27 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் திரைப்படம் ஓடிடியில் இன்று ஸ்ட்ரீம் ஆகியுள்ளது.

சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குனர் சீனு ராமசாமிக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததாக சொல்லப்பட்டது.

இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் வாங்கி வெளியிட்டார். சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பின்னர் மாற்றப்பட்டது. கடைசியாக ஜூன் 24 அம் தேதி ‘மாமனிதன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ஆனாலும் நல்ல விமர்சனங்கள் இருந்தும் திரைப்படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இல்லை. இந்நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி 3 வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. இன்று முதல் ஆஹா தமிழ் ஓடிடியில் ‘மாமனிதன்’ ஸ்ட்ரீம் ஆகிறது. இது சம்மந்தமான நிகழ்வில் இயக்குனர் சீனுராமசாமி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments