Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வித்தியாசமான தலைப்பில் சீனு ராமசாமி இயக்கும் அடுத்த படம்!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (07:20 IST)
சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவானது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இரண்டு ஆண்டு தாமதத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது.

ஆனால் திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து ரிலீஸுக்குப் பிறகு பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறது. சமீபத்தில் ரஷ்ய நாட்டில் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வாகி விருதை வென்றது.

இந்நிலையில் இப்போது சீனு ராமசாமி இடிமுழக்கம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து அவர் புதுமுக நடிகர் ஏகன் நடிக்கும் கோழிப்பன்னை செல்லதுரை என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments