Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நான்தான் பெரிய ஆள் என்று நிரூபிக்க வேண்டாம்..” செல்வராகவனின் லேட்டஸ்ட் அட்வைஸ் ட்வீட்!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (14:30 IST)
இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இடையில் அவர் நடிகராக அறிமுகமான ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. அடுத்து பகாசூரன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று செல்வராகவன் பகிர்ந்த ட்வீட் ஒன்று கவனம் பெற்றுள்ளது. அதில் “நம்மில் மிகப் பெரிய பிரச்சனை “ நானும் பெரிய ஆள்தான் “ என்று உலகத்திற்கு நிரூபிக்க போராடுவது! அந்த போராட்டத்தை கடவுளிடம் விட்டு விடுங்கள். அவர் ஒரு நாள் வெளிச்சம் போட்டு காட்டுவார். நாம் உள்ளது உள்ளபடியே வாழ்வோம்.” எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக செல்வராகவன் இதுபோல டிவிட்டரில் பல அறிவுரை ட்வீட்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐசரி கணேஷ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடகி கென்னிஷாவுடன் கலந்துகொண்ட ரவி மோகன்!

அட்லி &அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கிறாரா சமந்தா?... அவரே அளித்த பதில்!

பிரபல ஓடிடியில் ரிலீஸான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் ஜோடியாகும் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி!

சூர்யா & ஆர் ஜே பாலாஜி படத்தின் தலைப்பு இதுதானா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments