Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த நல்ல நடிகர்கள்… இளம் ஹீரோக்களைப் பாராட்டிய செல்வராகவன்!

vinoth
திங்கள், 13 மே 2024 (06:56 IST)
இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்களான என் ஜி கே மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. அடுத்து அவர் தன்னுடைய எவர்க்ரீன் ஹிட் படமான 7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் இப்போது சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இயங்கி வருகிறார். தான் பார்க்கும் படங்களைப் பற்றிய கருத்துகள், நடிகர்கள் பற்றிய பாராட்டுகள் என பலவற்றை சமூகவலைதளங்களில் அவர் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது அவர் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரியவர்களான கவின் மற்றும் மணிகண்டன் ஆகிய நடிகர்கள் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார். அதில் “கவின் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் நல்ல நடிகர்கள். அவர்களிடம் உள்ள நல்ல விஷயம் யதார்த்தமாகவும் அற்புதமாகவும் நடிக்கக் கூடியது.  அவர்கள் எந்த கதாபாத்திரத்தையும் எளிதாக உள்வாங்கி நடிக்கக் கூடியவர்கள். அவர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கக் கூடிய நல்ல நடிகர்கள்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments