Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஹல்க் வந்தாலே தாங்காது.. இப்போ ரெண்டு ஹல்க்..? – She Hulk Tamil Trailer!

Webdunia
புதன், 18 மே 2022 (15:48 IST)
மார்வெலில் பிரபல சூப்பர்ஹீரோக்களில் ஒருவரான ஷீ ஹல்க் இணைய தொடருக்கான தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பர்ஹீரோ படங்களாக எடுத்து தள்ளி உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்துள்ள நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ஸ்பைடர்மேன்; நோ வே ஹோம், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் அண்ட் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் போன்ற படங்கள் உலக அளவில் பெரும் வசூலை குவித்துள்ளன.

அதேசமயம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரும் லோகி, மூன் நைட் போன்ற சூப்பர்ஹீரோ மினி சிரிஸ்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக அடுத்ததாக ஷீ ஹல்க் வெளியாக உள்ளது.

நமது பேமஸ் சூப்பர்ஹீரோ ப்ரூஸ் பேனர் (ஹல்க்)ன் கசின்தான் இந்த ஜெனிபர் வால்டர்ஸ் என்னும் ஷீ ஹல்க். வக்கீலாக வாதாடும் இவர் ஒரு பக்கம் சூப்பர்ஹீரோவாய் மாறி சுளுக்கெடுக்கும் ஆக்‌ஷன் கதைதான் இந்த சிரிஸ். இதன் தமிழ் ட்ரெய்லரும் தற்போது வெளியாகி பெரும் ட்ரெண்டாகியுள்ள நிலையில் இந்த தொடர் ஆகஸ்டு 17 முதல் ஒளிபரப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments