Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகி கணேசன் மீது சித்தார்த் பகீர் புகார்!

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (20:18 IST)
இயக்குநர் சுசி கணேசன் மீது மீ டூ ஹேஷ்டேக்கில் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை பாலியல் புகார் கூறி பரப்பை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் லீனாவுக்கு ஆதரவாக சித்தார்த் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:  "லீனா நான் உங்களுடன் துணை நிற்கிறேன் லீனா. உங்களது குரல் கேட்கப்படும். உங்கள் துணிச்சல் மற்றவர்களை ஊக்குவிக்கும்.  #MeToo #ListenToTheAccuser #TimesUp" என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு டுவிட்டில். "சுசி கணேசன் எனது தந்தையிடம் வயதானவர் என்றும் பாராமல் தொலைபேசியில் மிரட்டியிருக்கிறார். லீனாவுக்கு நான் ஆதரவு தெரிவித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார். அதனால் இப்போது அனைவருக்கும் ஒரு விஷயத்தைத் தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இனி லீனா மணிமேகலைக்காக முன்பைவிட அதிகமாக துணை நிற்பேன். நல்லதொரு எதிர்ப்பை தெரிவித்திருக்கிறீர்கள்.  தைரியமாக இருங்கள் சகோதரி" எனப் பதிவிட்டுள்ளார்.
 
முன்னதாக மீ டூ க்கு எதிராக நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்ததை கண்டித்து நடிகர் சித்தார்த் டுவிட் போட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்