தயாரிப்பாளர் சங்கம் பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது.
சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பை தொடங்கக் கூடாது என சிம்புவுக்கு முன்னதாக அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் குரல் எழுப்பினர். இது சம்மந்தமான பஞ்சாயத்து பெப்சிக்கு சென்றது. அப்போது 5 நாட்கள் மட்டும் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கவேண்டும் என ஐசரி கணேஷ் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி ஒப்புதல் அளித்துள்ளார். ஏனென்றால் ஐசரி கணேஷ் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் சிலருக்கு இலவசமாக கலவி வழங்கி வருகிறாராம்.
ஆனால் பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணியின் இந்த முடிவால் தயாரிப்பாளர் சங்கம் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளது. அதனால் இனிமேல் ஆர் கே செல்வமணி தலைவராக இருக்கும் வரை எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளது. இதனால் இப்போது தமிழ் சினிமாவில் ஒரு கொந்தளிப்பான நிலை உருவாகியுள்ளது. இந்த எல்லா பிரச்சனைக்கும் சிம்புதான் காரணம் என செல்வமணி நேற்று கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.