Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு படம் ரம்ஜானுக்கு ரிலிஸ் ஆகிறதா? வெளியான அப்டேட்!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (16:19 IST)
சிம்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் ரம்ஜானுக்கு வெளியாகிறது என்ற செய்தி சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படம் தற்போது முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

முன்னதாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை உருவாகி கவனத்தை ஈர்த்திருந்தன. இந்த படத்தின் பெருவாரியான படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் 10 நாட்களே படப்பிடிப்பு நடக்க உள்ள நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகள் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இப்போது படக்குழுவினர் ரம்ஜான் பண்டிகைக்கு திரைப்படம் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனராம். ஏனென்றால் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளின் வேலைகளும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யும் பணிகள் இருப்பதால் ரம்ஜானுக்கு வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறுகின்றனராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments