Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு பிரச்சனையில் சிம்புவுக்காக இறங்கும் தயாரிப்பாளர்!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (09:56 IST)
நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்துக்கு வழக்கம் போல அவரின் படங்களுக்கு ஏற்படும் பிரச்சனை உருவாகியுள்ளது.

சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிம்பு ஏற்கனவே நடித்த சில படங்களின் தோல்வி அவரது மாநாடு படத்திற்கு பெரும் சிக்கலாக உள்ளது என்பதும்ம் இது குறித்து பஞ்சாயத்து தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்புவின் மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்தால் முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன் என டி ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர் அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த பிரச்சனையை சரி செய்ய தயாரிப்பாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

சிம்புவின் பெறோரின் பேச்சு சலசலப்புகளை உருவாக்கியுள்ள நிலையில் இப்போது சிம்பு மும்பையில் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் உள்ளார். இந்நிலையில் சிம்புவுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் உள்ள பிரச்சனையை தீர்க்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களத்தில் இறங்கியுள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

15 விளம்பரப் படங்களை வேண்டாம் என சொல்லிவிட்டேன்… நடிகை சமந்தா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments