பிரபல நடிகர் சிம்பு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது ரசிகர் மன்றத்தில் பல அணிகள் ஏற்படுத்த உள்ளதாக கூறி இருப்பதைப் பார்க்கும்போது அவர் அரசியலில் விரைவில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அரசியல் கட்சிகளை போலவே வழக்கறிஞர் அணி, இளைஞரணி, கலை இலக்கிய அணி என ஆரம்பிக்கப் போவதாகவும் ரசிகர்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதிப்பும் அன்பும் கொண்ட என் ரத்தத்தின் ரத்தமான என் உறவுகளே, வணக்கம்! நீண்ட நாளாக இயற்கையின் செயல்களால் உங்களிடம் நேரடியாக உறவாடாமல், உங்களின் தொலைபேசி வாயிலாக உறவு கொண்டோம்.
மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில் நுட்ப அணி, கலை இலக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரைவுபடுத்த உள்ளோம்.
ஆதலால் நம் நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவர் வாசு அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. ஆகையால் மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள் நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தேதி பின்னர் அறிவிக்கப்படும்
இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.