சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது இதற்காகதான்… சிம்ரன் பகிர்ந்த தகவல்!

vinoth
திங்கள், 9 ஜூன் 2025 (11:35 IST)
தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சிம்ரன். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித், கமல் என பலருடனும் படம் நடித்த இவர், பேட்ட படத்தில் ரஜினிகாந்திற்கும் ஜோடியாக நடித்தார். தற்போது வயதாகியிருக்கும் சிம்ரன் பல்வேறு துணைக் கதாப்பாத்திரங்களில் மகான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சமீபத்தில் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தில் சில நிமிட கேமியோ காட்சியில் நடித்திருந்தார்.  அதே போல அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் தன்னுடைய திரைவாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த கங்கா திரைப்படத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது. அப்போது என்னுடைய குடும்ப சூழல் காரணமாக அதில் நடிக்க முடியவில்லை. அந்த படத்தில் ரஜினி சாருடன் நடிக்கும் வாய்ப்பு போனது. அது பின்னர் பேட்ட படத்தில் நிறைவேறியது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுஷ்கா ஷெட்டி எடுத்த அதே முடிவை எடுத்த ஐஸ்வர்யா லட்சுமி.. ரசிகர்கள் சோகம்..

வித்தியாசமான உடையில் vibe ஆன லுக்கில் போஸ் கொடுத்த கௌரி கிஷன்!

ரித்து வர்மாவின் ஹாட் & க்யூட் போட்டோ ஆல்பம்!

பிரபு சாலமன் இயக்கத்த்தில் உருவாகும் கும்கி 2 படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ்!

பொங்கல் ரேஸில் மூன்றாவதாக இணைகிறதா சூர்யாவின் ‘கருப்பு’?

அடுத்த கட்டுரையில்
Show comments