Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வில்லனாக நடிப்பது எப்போது?... ரசிகரின் கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதில்!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (10:06 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டரில் சமீபத்தில் பதிலளித்தார்.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி (இன்று) ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.  இந்நிலையில் சமீபத்தில் பிரின்ஸ் படத்தின் ப்ரமோஷனுக்காக டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது சிவகார்த்திகேயனிடம் ரசிகர்கள் பலரும் கேள்விகளை கேட்டனர். ஒரு ரசிகர் “எப்போது வில்லனாக நடிக்கப் போகிறீர்கள். உங்களை வித்தியாசமான நடிப்பில் காண ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் “ வில்லன் ரோலில் நடிப்பது இயக்குனர்கள் சொல்லும் கதை மற்றும் அந்த பாத்திரத்தைப் பொறுத்துதான் அமையும். ஆனால் கண்டிப்பாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் என்னைப் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments