சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன்? நம்பர் ஒன் இயக்குனர் திட்டம்..!

Siva
புதன், 23 ஏப்ரல் 2025 (09:04 IST)
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இயக்குனர் இயக்க வாய்ப்பிருப்பதாகவும், இந்த படத்தில் ஸ்ருதிஹாசனை நாயகி ஆக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுவது கோலிவுட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இரண்டு படங்களுமே இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு உள்பட பலரும் இருப்பதாக இருந்தாலும், தற்போது வந்துள்ள தகவலின் படி லோகேஷ் கனகராஜ் அவருடைய அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. கூலி படத்தை முடித்தவுடன் அவர் சிவகார்த்திகேயன் படத்தை தொடங்குவார் என்றும், அதன் பிறகு தான் கைதி 2 படத்துக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சமீப காலமாக ஸ்ருதிஹாசன் உடன் நட்பில் இருக்கும் லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவரை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments