Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்ன மரத்துல ஒரு குத்து, பனமரத்துல ஒரு குத்து: சிவகார்த்திகேயன் கலகலப்பு பதில்

Webdunia
ஞாயிறு, 23 ஜூன் 2019 (17:30 IST)
நடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டதற்கு தென்ன மரத்துல ஒரு குத்து பனமரத்துல குத்து என்று பதிலளித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர் சங்க தேர்தல் பல பிரச்சனைகளுக்கு பிறகு, தற்போது நிறைவடைந்தது. இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவ அணியும் ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸின் அணியும் மோதின.

மேலும் முன்னணி நடிகர்கள் பலரும் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்தனர்.
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனிடம், செய்தியாளர்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு சிவகார்த்திகேயன் இரு அணிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் எனவும், ஆகையால் தென்னை மர சின்னத்துக்கு ஒரு குத்து, பனை மர சின்னத்துக்கு ஒரு குத்து என்று வடிவேல் நகைச்சுவையில் வருவது போல், கலகலப்பாக பதில் கூறினார்.

மேலும் அவர், யார் இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் வெற்றி பெற்றாலும் நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுகொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை இயக்க இயக்குனர்கள் இல்லை… ரஜினி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments