Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவழியாக படத்தின் நாயகியை அறிவித்த ராஜமௌலி – ஆர்.ஆர்.ஆர் அப்டேட் !

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (08:59 IST)
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்து ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை அறிவித்துள்ளது படக்குழு.

பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 மெஹா ஹிட்களுக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றிய கதையை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் , ராம்சரண் தேஜாவும் கதாநாயகனாக நடித்து வருகின்றனர். இதில் ராம்சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் நடித்து வருகிறார்.

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் சில தனிப்பட்ட காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து அவருக்குப் பதில் நடிக்க போகும் நடிகை யார் என்பதை அறிவிக்காமல் இருந்தது படக்குழு. இந்நிலையில் நேற்ற்ய் ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ஜெனிஃபர் என்ற கதாபாத்திரத்தில் ஓலிவா மோரீஸ் என்ற இங்கிலாந்து நாடக நடிகர் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடிகர் ரே ஸ்டீவன்சன மற்றும் அலிசன் டுடி ஆகியோர் வில்லன் மற்றும் வில்லியாக நடிக்க இருக்கின்றனர். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப்படம் 2020ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments