Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து தோல்வி : மீண்டும் ஹிட் கொடுக்க துடிக்கும் சூர்யா !

Webdunia
ஞாயிறு, 30 ஜூன் 2019 (14:34 IST)
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் என்ற படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே கல்லா கட்ட தவறியதுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. 
தெலுங்கு சினிமாவில் சூர்யாவுக்கு என்று தனி மார்கெட் உள்ளது. தெலுங்கு நடிகர்களுக்கு உண்டான மார்கெட் சூர்யாவுக்கு இருந்த நிலையில் என்.ஜி.கே படம் அந்த மார்கெட்டை கெடுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகிறது. அதனால் இழந்த மார்கெட்டை மீட்கும் முயற்சியில்  சூர்யா முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
 
தற்போது கே.வி ஆனந்த இயக்கத்தில் ,நடிகர் மோகன்லால் , ஆர்யாவுடன் , சூர்யா நடித்துக் கொண்டுள்ளார். இப்படத்திற்கு தமிழில் காப்பான் என்றும், தெலுங்கில் பந்தோபஸ்த்' (BANDOBAST) என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுவதாகத் தெரிகிறது. இதில் சூர்யா தன் சொந்த குரலில் டப்பிங் பேசவுள்ளார்.
 
மேலும் இப்படம்  தமிழில் வெளியாகும் அன்று தெலுங்கிலும் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் பந்தோபஸ்  என்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ராஜமௌலி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெண்டில் வுமன் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி… டைட்டில் அறிவிப்பு!

சமீப வருடங்களில் சிறந்த சினிமா அனுபவம்.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய ராஜமௌலி!

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி… எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால்!

ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்… மேடையில் அறிவித்த விஷால் & தன்ஷிகா!

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments