Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவரைப் போன்ற தலைவர் தான் தமிழகத்தை ஆள வேண்டும், நடிகர்கள் அல்ல: சத்யராஜ் பளிச்

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (10:45 IST)
நல்லகண்ணு போன்ற தலைவர் தான் தமிழகத்தை ஆள வேண்டும், நடிகர்கள் அல்ல என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.


 
இதுகுறித்து மலையாள தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடலில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசிய சத்யராஜ், ''எனது 41 வருட சினிமா பயணத்தில் அரசியல் எப்போதும் என்னைக் கவர்ந்ததில்லை. தியாகமும், அர்ப்பணிப்பு உணர்வும் வேண்டுகிற முதல்வர் பதவிக்கு நாங்கள் தகுதியற்றவர்கள். 
 
சினிமாவில் உள்ள பிரபலத்தைப் பயன்படுத்தி முதல்வராக வேண்டும் என்பது சரியல்ல. நடிகர்களின் அரசியல் என்பது முதல்வர் பதவிக்கானது. மக்களின் சேவைக்கானது அல்ல.
 
நான் கேரள முதலவர் பினராயி விஜயனை மதிக்கிறேன். அவர் சிறந்த அரசியல்வாதி. அவரைப் போல தமிழகத்திலும் நல்ல தலைவர்கள் உள்ளனர். நாம் முதல்வர்களை திரைத்துறையிலிருந்து தேர்ந்தெடுக்கக் கூடாது.
 
உதாரணத்துக்கு தமிழகத்தில் நல்லகண்ணு என்ற சிறந்த தலைவர் இருக்கிறார். அவரைப் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments