Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பராசக்தி படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை… இயக்குனர் சுதா கொங்கரா பதில்!

Advertiesment
சூர்யா

vinoth

, சனி, 24 மே 2025 (10:36 IST)
சூர்யா நடிப்பில் உருவாக இருந்து கைவிடப்பட்ட புறநானூறு கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ’பராசக்தி’ என்ற பெயரில் டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்கி வருகிறார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய வேடங்களில் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தற்போது இலங்கையில்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு முன்னோட்ட வீடியோவும் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கவனம் பெற்றது. இதன் காரணமாக ‘பராசக்தி’ திரைப்படம் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தோடு மோதும் என அறிவிப்பெல்லாம் வெளியானது.

இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் அமலாக்கத்துறையின் சோதனையிட்ட நிலையில் அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் தயாரிக்கும் படங்களின் பணிகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. அதிலும் குறிப்பாக இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ‘பராசக்தி’ திரைப்படம் முடக்கப்படலாம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது படம் குறித்த கேள்விக்கு “பராசக்தி படத்துக்கு அமலாக்கதுறை சோதனையால் எந்த பாதிப்பும் இல்லை. சிவகார்த்திகேயன் தற்போது மதராஸி படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கையில் உள்ளார். அவர் வந்ததும் மீண்டும் ஷூட்டிங் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சில ஆண்டுகளுக்கு முன்னர் கோலி என்னைத் தெரியாது என்றார்… ஆனால் இப்போ? – சிம்பு பகிர்ந்த தகவல்!