Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சங்கமித்ரா தொடங்கினால் 2 ஆண்டுகள் ஆகும்… எக்கசக்கமாக சஸ்பென்ஸை ஏத்திய சுந்தர் சி!

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (10:57 IST)
ஜெயம்ரவி, ஆர்யா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த திரைப்படம் சங்கமித்ரா. 2017 ஆம் ஆண்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது என்பதும் 2018ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகிகளாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் ஒப்பந்தமாகி இருந்தனர்.

ஆனால் பொருளாதார பிரச்சனை காரணமாக இந்த படம் தொடங்கப்படவில்லை. இதையடுத்து இப்போது பொன்னியின் செல்வன் வெளியாகி ஹிட்டாகியுள்ள நிலையில் மீண்டும் இந்த படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் சுந்தர் சி.

இப்போது அரண்மனை 4 படத்தை இயக்கி வரும் அவர், இந்த ஆண்டு இறுதியில் சங்கமித்ரா தொடங்கப்படும் எனவும், படம் முடிய 2 ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படமும் பொன்னியின் செல்வன் போல 2 பாகங்களாக ரிலீஸ் ஆகும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

வித்தியாசமான உடையில் யாஷிகா ஆனந்தின் ஒய்யாரப் போஸ்கள்.. அழகிய ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments