கருப்புப் படத்துக்கு முன்பே ரிலீஸாகிறதா சூர்யா 46?

vinoth
வெள்ளி, 21 நவம்பர் 2025 (08:31 IST)
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் கருப்பு படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் தனிப்பாடலான ‘God mode’ பாடல் வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான காந்தாரா-1 படம் பெற்ற அளப்பரிய வெற்றியை அடுத்து கருப்பு படத்தில் க்ளைமேக்ஸ் காட்சி மாற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் க்ளைமேக்ஸ் காட்சிக்கு ஏற்றவாறு தற்போது மேலும் சிலக் காட்சிகளையும் மாற்றுகின்றனராம். இதற்காக சூர்யா மீண்டும் மூன்று நாட்கள் இந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இன்னும் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் முடியாததால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையில் கருப்புப் படத்துக்கு முன்பாகவே சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 46’ படம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தை ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

சிம்புவுக்கு சொன்ன கதையைதான் ரஜினிக்கு சொல்லி ஓகே வாங்கியுள்ளாரா ராம்குமார் பாலகிருஷ்ணன்?

அடுத்த கட்டுரையில்
Show comments