Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 கோடி ரூபாய் வசூலை எட்டிய சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம்!

vinoth
புதன், 7 மே 2025 (12:47 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. முதல் நாளில் 20 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இந்த படம் அதன் பின்னர் வசூலில் அடிவாங்கியது.

இந்நிலையில் படம் வெளியாகி 5 நாட்களில் உலகளவில் இந்த படம் 104 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூர்யாவின் கங்குவா திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் ‘ரெட்ரோ’ படம் ஒரு சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது.

படத்தில் இருக்கும் குறைகள் பெரிதாக்கப்பட்டு ஆன்லைனில் இந்தப் படத்தைத் தாக்கும் விமர்சனங்கள் மற்றும் மீம்களும் அதிகளவில் பரவி வருகின்றன. இதுபற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ‘இந்தப் படத்தின் மூலம் ஆன்லைன் விமர்சனங்களைப் பார்க்கக் கூடாது என்பதைக் கற்றுக் கொண்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்!

தயாரிப்பாளர் லலித் கதாநாயகனாக நடிக்கும் ‘எஸ்கார்ட்’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

தென் கொரியாவில் நடக்கும் பிரியங்கா மோகனின் புதிய பட ஷூட்டிங்… இயக்குனர் யார் தெரியுமா?

மேடையில் கண்கலங்குவது ஏன்?... சமந்தா விளக்கம்!

சிவகார்த்திகேயன் பட திரைக்கதை விவாதத்துக்காக வெளிநாடு சென்ற வெங்கட்பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments