Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா பிறந்தநாளில் அன்னதானம், ரத்ததானம்! – ரசிகர்களுக்கு சூர்யா நன்றி!

Webdunia
ஞாயிறு, 25 ஜூலை 2021 (10:42 IST)
நேற்று நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் மக்களுக்கு உதவும் வகையில் செயல்பட்ட ரசிகர்களை நடிகர் சூர்யா பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து சமூக வலைதளங்களில் கொண்டாடினர். மேலும் பல மாவட்டங்களில் அவரது ரசிகர்கள் கோவில்கள், பொது இடங்களில் அன்னதானம் வழங்குதல், ரத்ததான முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பொதுசேவை மூலமாக சூர்யா பிறந்தநாளை கொண்டாடினர்.

இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் அவற்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா தனது பிறந்தநாளில் மக்கள் சேவை செய்த ரசிகர்களை பாராட்டியதுடன் நன்றியும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments