Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நலமுடன் திரும்பி வாருங்கள் சகோதரரே”… T ராஜேந்தரை சந்தித்த கமல்

T Rajendar will address press before leaving to America
Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (15:13 IST)
நடிகர் T ராஜேந்தர் இன்று சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.

தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞர்களில் ஒருவர் T ராஜேந்தர். இயக்கம், ஒளிப்பதிவு, இசை நடிப்பு, தயாரிப்பு, விநியோகம் என பல துறைகளில் வெற்றியாளராக பவனி வந்தவர் டி ராஜேந்தர். இவரின் மகனான சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில் டி ராஜேந்தர் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்ல உள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகரும், TR-ன் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான கமல்ஹாசன் அவரை இல்லத்துக்கு சென்று சந்தித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கமல் “நலமுடன் திரும்பி வாருங்கள் நண்பரே” என்று டிவீட் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments