Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் வெற்றிகரமான தோல்வி: தமிழிசையை கிண்டல் செய்த கஸ்தூரி!

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (06:29 IST)
இதுதான் வெற்றிகரமான தோல்வி என நேற்று நடைபெற்ற சிஎஸ்கே போட்டியை குறிப்பிட்டதோடு, தமிழக பாஜக தலைவர் தமிழிசையையும் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த ஆண்டு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானபோது, 'வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் தேர்தல் முடிவுகள் தோல்வியாக இருக்கலாம். ஆனால், அது வெற்றிக்கு அருகில் வரை சென்றதால் இது ஒரு வெற்றிகரமான தோல்வி என தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
 
இந்த பேட்டியை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் நேற்றைய சிஎஸ்கே மற்றும் பெங்களூரு போட்டியை குறிப்பிட்டு டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் 26 ரன்கள் அடிக்க வேண்டிய இருந்த நிலையில் தல தோனி 24 ரன்கள் அடித்து வெற்றிக்கு மிக அருகே தனது அணியை கொண்டு சென்றார். இருப்பினும் இரண்டு ரன்கள் அவரால் கடைசி பந்தில் எடுக்க முடியாததால் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி, 'தோனியின் போராட்ட குணம் குறித்துதான் எங்கும் பேச்சாக உள்ளது. தோத்தா இப்படி பெருமைப்பட  தோக்கணும்னுயா.  #தல டா'' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது இதான் இதுக்கு பேரு தான் வெற்றிகரமான தோல்வி என குறிப்பிட்டு தோனி மற்றும் தமிழிசையின் புகைப்படங்களையும் அவர் பதிவு செய்து அவர் கிண்டலடித்துள்ளார்.
 
கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு பெரும்பாலான டுவிட்டர் பயனாளிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெண்டில் வுமன் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி… டைட்டில் அறிவிப்பு!

சமீப வருடங்களில் சிறந்த சினிமா அனுபவம்.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய ராஜமௌலி!

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி… எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால்!

ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்… மேடையில் அறிவித்த விஷால் & தன்ஷிகா!

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments