துணிவு மற்றும் வாரிசு படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஜனவரி 13 ஆம் தேதி 16 ஆம் தேதி வரை துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களுக்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்றும் இன்றும் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இப்போது திடீரென்று ஜனவரி 12, 13 மற்றும் 18 ஆகிய மூன்று தேதிகளும் கூடுதல் காட்சிகள் திரையிட்டுக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.